Skip to main content

“இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம்” - அமைச்சர் எ.வ. வேலு தாக்கு!

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
Minister eV Velu says This is a shame for the ADMK 

தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம். என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைத்தொகையையும், மகளிர் விடியல் பயணத்தையும் இழிவுப்படுத்தி பேசியிருக்கிறார் பழனிச்சாமி. அவருடைய ஆட்சியில் காயலான் கடை கணக்காக ஓடிக்கொண்டிருந்த பேருந்துகளை அகற்றிவிட்டு, புதிய பேருந்துகள் வாங்கி தமிழ்நாடு முழுக்க விட்டிருக்கிறது திராவிட மாடல அரசு.

அதிலும் மகளிர் இலவச பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை முற்றிலும் புதுமையானதாகவும் சிறப்பானதாகவும் வடிவமைத்து விட்டிருக்கிறோம். இதெல்லாம் பேருந்தில் செல்பவர்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியும். விடியல் பயணம் திட்ட பஸ்ஸுக்கு லிப்ஸ்டிக் அடித்து விட்டுள்ளார்கள் என்று கொச்சைப்படுத்தி ஒட்டுமொத்த மகளிரையும் கேவலப்படுத்தியிருக்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 இலட்சம் கோடிக்கும் மேலாக கடன் வாங்கியபோதும் அதனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கோ தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் சிறப்பு திட்டம் எதையும் செயல்படுத்தாமல் ஊழல் ஆட்சி நடத்திய பழனிசாமி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்த்தி தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் அரசின்  திட்டங்களின் மூலம் பயனடைய செய்திருக்கும் திராவிட மாடல் அரசைப் பற்றி குறை சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.

கடன் வாங்கி மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், விடியல் பயணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்கிறார்கள் இந்த கடனை எப்போது அடைப்பார்கள் என்று என்னவோ ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக எடப்பாடி ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த கடனை அடைக்கும் திறனும் திறமையும் முதல்வருக்கு உண்டு. எடப்பாடி அவர்களே... எங்கள் முதலமைச்சர் இன்றைக்காகவோ நாளைக்காகவோ சிந்திப்பவர் அல்ல. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக சிந்திக்கும் அக்கறையுள்ள ஒரு தலைவர்.

அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என சட்ட மன்றத்தில் முதலமைச்சர் அதிமுகவினரிடம் கேட்டு அவர்களின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தினார். முதலமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடி வந்து விட்டு பத்திரிக்கையாளர்களிடம் வீராவேசமாக பழனிசாமி பேசியிருப்பதை பார்த்து மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாநகர் சிறுமி வழக்கில் அதிமுகவை சேர்ந்தவருக்கு இருந்த தொடர்பு சந்திக்கு வந்துள்ளதை மறைக்க பழனிசாமி நடத்திய கபட நாடகம்தான் யார் அந்த சார்? எனும் வதந்தி அரசியல் என்பது மக்களுக்கு தெளிவாகிவிட்டது.

Minister eV Velu says This is a shame for the ADMK 

தந்தை பெரியாரையே சீமான் கடுமையாக அசிங்கப்படுத்தியிருக்கிறார். அவரை வன்மையாக கண்டிக்காமல் வலிக்காத மாதிரி வார்த்தைகளை விட்டிருக்கிறார் பழனிசாமி. இது அதிமுக இயக்கத்துக்கே அவமானம். தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அநீதியான யுஜிசி அறிவிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் போன்ற முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பதான் பாஜகவின் அடியாளான சீமான் இப்படி பேசி இருக்கிறார் என்று புரிந்தததால்தான் பாம்புக்கும் வலிக்காமல் தடிக்கும் வலிக்காமல் பார்த்துக்கொண்டு கண்டிக்கிறார் பழனிசாமி. இதற்கு பதிலாக அண்ணா திமுக என்னும் பெயரையே அமித்ஷா திமுக என்றோ, ஆர்.எஸ்.எஸ். திமுக என்றோ மாற்றிக் கொள்ளலாம்.

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் பதில் சொல்ல முடியாதவர் சட்டமன்றத்தில் வாங்கி கட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் வெளியே போய் பொய்களை விதைத்திருக்கிறார். எந்த தகுதியுமே இல்லாமல் குறுக்கு வழியில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அந்த முதலமைச்சர் பதவிக்கு சிறுமைதான் சேர்த்தார். தன்மானத்துக்கும் சுய கௌரவத்துக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக்கே இழுக்காகவும் அவமான சின்னமாகவும் மத்திய அரசுக்கு கும்பிடு போட்டு அடிமையாகி தமிழ்நாட்டு மாண்பையே குலைத்தவர் பழனிசாமி” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்