Published on 30/09/2020 | Edited on 30/09/2020

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்ததிலிருந்து தற்போது வரை அதிகாரப்பூர்வ முடிவு எட்டப்படாத நிலையில், வரும் 7 -ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அ.தி.மு.க தலைமை அறிவிக்க இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அடுத்து அ.தி.மு.க ஆட்சிதான்" எனக் கூறியுள்ளார்.
தலைமையின் அனுமதியின்றி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது எனவும், 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் எனத் தலைமை தெரிவிக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அ.தி.மு.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.