![Minister Anbil Mahesh who gave the award to 13 teachers](http://image.nakkheeran.in/cdn/farfuture/7NfPCB1eAK91CjwOamG6jQsM5fXIvAD2OiUEIFz2Itw/1630921088/sites/default/files/inline-images/teachers-award.jpg)
இந்தியா முழுவதும் நேற்று (05.09.2021) முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினார்கள். ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை நல்ல ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவிக்கபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்குப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் விவரம்; மணச்சநல்லூர் கவுண்டம்பட்டி ஊராட்சி தலைமை ஆசிரியர் கீதா, துறையூர் தொப்பம்பட்டி ஊராட்சி தலைமை ஆசிரியர் அசோக்குமார், எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி இடைநிலை ஆசிரியர் ஜெயராணி, வையம்பட்டி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி, வெல்லனூர் ஊராட்சி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியன், மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துச்செல்வன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அன்பு சேகரன், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவராஜ், மணப்பாறை உசிலம்பட்டி தியாக சிலர் ஆலய மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், திருநெடுங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நித்யானந்தம், திருவரம்பூர் மேலகல்கண்டார்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பீபி அப்துல், கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன், திருவரம்பூர் வெங்கூர் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பகவதியப்பன் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.