Skip to main content

‘ரூ.5க்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்’ - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Metro administration announcement You can travel by metro train for Rs.5'  at tomorrow

 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, சிறப்பு கட்டண சலுகையை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கியிருந்தது. அதன்படி, நாளை (03-12-23) ஒரு நாள் மட்டும் க்யூஆர் பயணச்சீட்டு ( paytm, phonepe, static QR) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ‘மிக்ஜம்’ புயல் மற்றும் கனமழை உருவாக வாய்ப்பு  உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகிருந்த நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதனால், மெட்ரோ பயணிகள் அதிகளவில் நாளை (03-12-23) பயணிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சிறப்பு கட்டண சலுகையை கூடுதலாக ஒரு நாள் நீட்டித்துள்ளது. அதன்படி, மெட்ரோ பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, அதிக பயணிகள் இந்த சிறப்பு கட்டணத்தில் பயணிக்க வருகின்ற 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 
 

Next Story

அசுர வேகத்தில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்; அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Madurai Coimbatore Metro Project at breakneck speed; Report submission next month

 

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. ரூ. 8500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரித்து வழங்குமாறும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஐதராபாத் நிறுவனத்திடம் அறிவுறுத்தியிருந்தது.  

 

அதேபோல் கோவை மெட்ரோ ரயில் திட்டமும் ரூ. 9424 கோடி மதிப்பீட்டில் 139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி முதல் கருமத்தம்பட்டி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

இந்நிலையில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90% நிறைவடைந்துள்ளதாகவும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.