Published on 24/11/2019 | Edited on 24/11/2019
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே திருஆயர்தபாடி என்னுமிடத்தில் காந்தகத்தை வைத்து பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பியது பினாகினி எக்ஸ்பிரஸ்.


சம்பவம் நடந்த இடத்தில் சென்னை கோட்டை ரயில்வே பாதுகாப்புத் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஐபிஎஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து மத்தியம் 2:30 மணிக்கு ஹைத்ராபாத்துக்கு கிளம்பிய இந்த ரயில் பொன்னேரி அருகே வந்த போதுரயில் பலத்தசத்ததுடன் அதிர்ந்தது. இந்த தகவல் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பபட்டதை தொடர்ந்து விரைந்து வந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.