Published on 16/09/2021 | Edited on 16/09/2021

கஞ்சா விற்பனை வழக்குகளில் ஜாமீன், முன்ஜாமீன் கோரிய வழக்குகள் இன்று (16/09/2021) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்குகளை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குக் குறைவான காவலர்களை ஒதுக்கீடு செய்தால் கஞ்சா விற்பனையை எப்படித் தடுப்பது? 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிகளவு போலீசாரை ஒதுக்கீடு செய்ததால் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுள்ளது" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.