தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு திவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசியல் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் பலரும் தானாகவே முன் வந்து கரோனாவில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்காகத் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள ஆர்.ஒ.பி. மெயின் தெருவில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்ததோடு, அதன்பின்பு அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.