கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்து எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 1,267 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் 15 பேர் உயிரிழந்திருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு பெரும்பான்மையானோர் வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 22 பேர் குணமடைந்தனர். இது மதுரை மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.