Published on 03/01/2019 | Edited on 03/01/2019
சென்னை பல்லாவரத்தில் கேரள முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் உட்பட பாஜகவினர் 150 பேர் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, உருவ பொம்மையை எரித்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.