கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.முட்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் அபாயம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், மூசா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன் ஜி.ஆர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.சதானந்தம் ப.வாஞ்சிநாதன்,U.மூர்த்தி M.P.தண்டபானி ஜே.ராஜேஷ்கண்ணன். சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் கிரமசபை கூட்டங்களில் இந்த திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவருவது, மீனவ கிராமங்கள் உள்ளிட்ட பாதிக்கபடும் கிராமங்களிலிருந்து எதிர்ப்பு கடிதங்களை மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவமாற்ற துறைக்கு அனுப்பிட ஏற்பாடுகளை செய்வது.
சிப்காட், சைமா சாயக்கழிவு நாகார்ஜூனா நிறுவனம், அனல்மின் நிலையம், இறால் பண்ணைகள், வரவிருக்கும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் போன்றவை பேராபத்தாக முன்பே இருக்கும் சூழலில் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டமும் வந்தால் நமது மாவட்டத்தின் விவசயம், சுற்றுசூழல், மக்களில் வாழ்வாதாரம் போன்றவை எப்படி பாதிக்கும் என்பதை முழுமையாக மக்களுக்கு விளக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கேட்டு மக்கள் இயக்கங்களை நடத்துவது.
வருகின்ற ஜூன் மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இப்பகுதிகள் முழுவதும் நூற்றுகணக்கான கிராமங்களை சந்திக்கும் வகையில் பிரச்சார இயக்கங்களை நடத்துவது, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடிய தமிழ்நாடு அரசாங்கம் இனியாவது விழித்துக் கொண்டு மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசை எதிர்த்து களம் காண வேண்டும்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உ.வாசுகி தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்ற 13 பேரை போலீஸார் சுட்டுகொன்று ஒரு ஆண்டு முடிந்துள்ள நிலையில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்துள்ளோம். வழக்கை சிபிஐ 4 மாதத்தில் முடிக்க வேண்டும். ஆனால் 9 மாதம் ஆகியும் சம்பந்தபட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மீது சரியான நடவடிக்கை இல்லை. பொய்வழக்கு போட்ட மக்கள் மீதே விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் வழக்கை முடிக்கவேண்டும். அதில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்கிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்ற போது அவை குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்ந டத்துவது தான் வாடிக்கை, ஆனால் வேதாந்தா நிறுவனம் தனக்கு இதிலிருந்து விலக்கு கேட்டு இருக்கிறது எனவேகருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திதான் எந்த முடிவும் எடுக்க வேண்டு. ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும் 7,8 தேதிகளில் இருசக்கர விழிப்புணர்வு கூட்டம் நடத்தவுள்ளது. இதில் மக்கள் திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்று கூறினார்.