


திருச்சி, கோப்பு கிராமத்தில் 'நம்ம ஊர் பொங்கல்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பொங்கல் விழாவிற்கு காலை 10 மணியிலிருந்து பெண்கள் தயார் படுத்தப்பட்ட நிலையில், மதியம் ஒரு மணி அளவில் குழுமியிருந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலை கிண்டி கொண்டாடி முடித்தனர். குஷ்பு சுந்தர் 5 மணிக்கு பொங்கல் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
குழுமியிருந்த பெண்களுக்கு குஷ்பு சுந்தர் மதியம் 1 மணிக்கெல்லாம் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுப்புகளை பற்றவைத்த பெண்கள் பொங்கலை தயார்படுத்தினார்கள். ஆனால் குஷ்புவின் வருகை தாமதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டதால் அனைவரும் பொங்கல் விழாவைக் கொண்டாடி முடித்தனர்.
முடிந்துபோன பொங்கல் விழாவில் பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு, மீண்டும் அவருக்காக மற்றொரு முறை அடுப்புகளை பற்றவைத்து இரண்டாவது முறையாக ஒரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.