Skip to main content

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
misbehaviour of schoolgirls in villupuram and arrest posco act

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருவக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மாணவியின் தாய் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவியை மீட்டுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் விசாரித்தார்.

அப்போது அந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச படங்களை பார்க்குமாறு பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (38) வற்புறுத்தியதாகக் கூறினார். மேலும், அந்த ஆசிரியர் அரசு விழா நடப்பதாகக் கூறி விழுப்புரத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் பாலியல் தொல்லை கொடுத்தாகவும், பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால்தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து நேற்று (13-12-23) பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த தகவல் பள்ளி முழுக்க பரவியதையடுத்து, தமிழ் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் 5 பேர் பள்ளிக்கு வந்து ஒரே மாதிரியாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். 

இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் உறவினர்கள், பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். அதன் பின்னர், அவரை வானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, போலீசார் மகேஸ்வரனிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் கடந்த ஆண்டுதான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவிகளை மகேஸ்வரன் ஆர்வமுடன் அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மகேஸ்வரனின் நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

லஞ்சம் லஞ்சம் லஞ்சம்... விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தைக் கதறவிட்ட ‘இந்தியன் 2’

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Villupuram Collectorate noticed with the name 'Indian 2' has been pasted

தமிழகம் முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகள், புகார்கள், குறைகள் எனப் பலவற்றையும் மனுவாகக் கொடுத்துத் தீர்வு கண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடந்தது. 

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்குப் பின்னால் யாரோ ஒரு மர்ம நபர் ஓட்டிய நோட்டீஸில், “அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளைப் பூர்த்தி செய்யுங்கள்; ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள்:” என்று குறிப்பிட்டு கடைசியாக இந்தியன் 2 என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறைத்தீர்க்கும் முகாமில் மனு அளித்தவர்களில் யாரோ ஒருவரின் கோரிக்கை நிறைவேறாததால்தான் இப்படி விரக்தியில் எழுதி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் மக்களிடம் லஞ்சம் கேட்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்தியன் தாத்தா தேடிச் சென்று பழி வாங்குவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் 'இந்தியன்' முதல் பாகத்தில், 'லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்கள்..' என்று கடிதம் இடம்பெற்றிருக்கும். தற்போது அதேபோன்று ஒரு கடிதத்தை யாரோ ஒரு மர்ம நபர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டிச்சென்றுளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தகராறு செய்த மனைவி; திருமணம் செய்து வைத்த புரோக்கரை தாக்கிய கணவர்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 husband  beaten broker who had married him because his wife had a dispute

விழுப்புரம் மாவட்டம் வடவாம்பழத்தைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் சக்திவேல். இவர் கூலி தொழில் பார்த்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்வருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சக்திவேல் - ஜெகதீஸ்வரி இருவருக்கும் அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்ற கல்யாண புரேக்கர் திருமணம் செய்துவைத்திருக்கிறார். 

இந்த நிலையில் கணவன் சக்திவேலுக்கும், மனைவி ஜெகதீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிக் கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மனைவி ஜெகதீஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இருவருக்கும் வரன் பார்த்து திருமணம் செய்துவைத்த புரோக்கர் பெருமாளை தாக்கியுள்ளார். அரசமங்கலம் ரேஷன் கடையில் நின்றுக்கொண்டிருந்த அவரை சக்திவேல், “நீ தான எனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வச்ச, இப்போ பாரு என் மனைவி அடிக்கடி சண்டை போடுறா..” என்று ஆபாச வார்த்தையில் புரோக்கர் பெருமாளை திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரோக்கர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.