Published on 10/05/2019 | Edited on 10/05/2019
11 மற்றும் 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே இருக்கும் என வெளியான செய்திகள் தவறானவை என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம். இதில் ஏதாவது ஒன்றை மொழிபடமாக தேர்வு செய்து கொள்ளலாம் என செய்திகள் வெளியான நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
11, 12ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல ஆறு பாடங்கள் இருக்கும். ஐந்து பாடங்களாக குறைக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தாய்மொழி தமிழை கண்டிப்பாக மாணவர்கள் பயில வேண்டும் எனவும் கூறியுள்ளார்.