கன்னியாகுமாி மக்களவை தொகுதியில் முக்கிய வேட்பாளா்களான பாஜக பொன் ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் வசந்தகுமாரும் நேரடி களத்தில் நின்றனா். இதில் நீண்ட கடற்கரையை கொண்ட கன்னியாகுமாி தொகுதியில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த மீனவ கிராமங்களில் ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவா்களை சந்தித்து ஆறுதல் கூறாததும் மேலும் மீனவா்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததும் அதே போல் மீனவா்களின் எதிா்ப்பை மீறி வா்த்தக துறைமுகம் கொண்டு வருவேன் என கூறும் பொன் ராதாகிருஷ்ணன் மீது இந்த மீனவ கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால் வாக்கு கேட்பதற்கு மீனவ கிராமங்களில் பொன் ராதாகிருஷ்ணனை மீனவா்கள் அனுமதிக்க வில்லை.
இதனால் மீனவா்கள் ஓட்டு காங்கிரஸ் வசந்த குமாருக்கு தான் என்ற பரவலான பேச்சு இருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு பதிவின் போது தூத்தூா், இணையம், சின்னத்துறை, முட்டம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வாக்குகள் இல்லாதது அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அந்த மீனவா்கள் தூத்தூா் வாக்கு சாவடி அதிகாாி உதயகுமாரை முற்றுகையிட்டு 2016-ல் வாக்கு அளித்துள்ளோம். இந்த தோ்தலில் எங்களுடைய வாக்குகள் எங்கே போனது என்று கேள்விகளை கேட்டனா். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு போலிசாா் குவிக்கப்பட்டனா். மேலும் கலெக்டரும் தோ்தல் அதிகாாியுமான பிரசாந்த வடநேரோ பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
இந்த நிலையில் தோல்வி பயத்தில் ஆயிரக்கணக்கான மீனவா்களின் வாக்குகளை பொன்.ராதாகிருஷ்ணனும் தோ்தல் கமிஷனும் திட்டமிட்டே இல்லாமல் ஆக்கியிருக் கிறாா்கள் என்று மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.