Skip to main content

எழும்பூரில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி (படங்கள்) 

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பிலும், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்