Skip to main content

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திரபாலாஜியை நீக்க வேண்டும்: ம.நீ.ம.

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திரபாலாஜியை நீக்க வேண்டும் என்று மக்கள்  நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.       அவ்வறிக்கையில் மேலும்,  கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசியது கண்டனத்திற்குரியது.   பதவிப்பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.                                                 .                                                                                                                                                                                                          

க்

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  நேற்று முன் தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.  

 

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியதாக தகவல் வெளியானது. 

 

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த  உறுதிமொழியை ராஜேந்திர பாலாஜி மீறியுள்ளார். ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்