Skip to main content

தம்பதியினரின் விபரீத முடிவு; மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் போலீஸ்

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

 Couple working as wage labourers lost their lives after

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜாராம்(58) - சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  ராஜாராம் மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் நேற்று இரவு தூங்குவதற்காக  தங்களது அறைக்குள் சென்றுள்ளனர். ஆனால் காலை நீண்ட நேரமாகியும் அந்த அறை திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

அறையில் ராஜாராம் - சாமுண்டீஸ்வரி இருவரும் விஷம் அருந்திய நிலையில் வாயில்  நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல் நிலைய போலீசார் இருவருடைய உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையா? அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்