Skip to main content

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயங்கள் துறையில்  (FSSAI) வேலை !

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

மத்திய அரசின் "FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA" (FSSAI) துறையின் 250 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு. இந்த துறையில் பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணபிக்க முடியும். இதற்கான இணையதள முகவரி : https://fssai.gov.in/home/career.html ஆகும். 

 

fssai



மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 26-03-2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-04-2019 . இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி (B.E , B.Tech , M.Tech ,B.Sc , M.E) உள்ளிட்ட பட்டப்படிப்பை முடித்த  இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.  அதே போல் விண்ணப்ப கட்டணமாக (OBC/GENERAL)  ரூபாய் 750 மற்றும் Intimation Charges Rs. 250 மொத்தம் ரூபாய் 1000 இணைய வழி பணபரிமாற்றம் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் (SC/ST ,WOMEN , Ex-Servicemen ) உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம்   செலுத்த தேவையில்லை. ஆனால் Intimation Charges Rs.250 மட்டும் இணைய வழியில் செலுத்த வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி :
www.fssai.gov.in சென்று அறிந்து கொள்ளலாம் (அல்லது) கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-266-0793 மற்றும் ஈ-மெயில் முகவரி : fssaihelpdesk19@gmail.com இதனை பயன்படுத்தி பணியிடங்கள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்