Skip to main content

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளை! பொதுமக்கள் அச்சம்!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
robbery


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையம் எல்லையில் உள்ள ஒத்தக்கடை சீனுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (54) மோசகுடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். அவரது மனைவி லில்லி விசலூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இருவரும் இன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். அதேபோல புதுக்கோட்டை தாவுது மில் சிப்பாட் ஹைவேஸ் சிட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மகன் கார்த்திகேயன் (29) சொந்த வேலையாக வெளியூர் சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டு பூட்டு பீரோ உடைக்கப்பட்டு 30 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த ரூ.8 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் மற்றும் அதிகாலையில் கீரமங்கலத்தில் நடந்த முகமூடி கொள்ளை சம்பவங்கள் மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் திருடர்கள் முகமூடி அணிந்து வருவதால் போலீசாரும் திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கத்தியைக் காட்டி வழிப்பறி; 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 years in jail for 5 people who stole 12 lakh rupees from Tasmac supervisor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான திருச்செல்வம் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு கடையின் விற்பனை பணம் ரூ.12 லட்சத்தை எடுத்து கொண்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி வழியே ராகவரெட்டிமேடு பகுதிக்கு செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளி கத்தியை காட்டி மிரட்டி 12 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றது. 

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து  சோழவரம் அருண், புழல் பக்ருதீன், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார், அருண், ஜெய்சீலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்ததும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

ஜன்னலோர பயணம்; அடுத்தடுத்து 2 பெண்களுக்கு நேர்ந்த துயரம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
 window travel by train; Next is the tragedy of 2 women

ஈரோட்டிற்கு அடுத்தடுத்து வந்த ரயில்களில் ஜன்னலோரம் பயணித்த 3 பெண்களிடம் நகை பறிப்பு சிக்னலில் மெதுவாக சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனங்கூர் ரயில் நிலையம் பகுதியில் சம்பவத்தன்று இரவு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் கழுத்தில் இருந்த 5 கிராம் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதனையடுத்து வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஜன்னலோரம் பயணம் செய்த 2 பெண்களிடம் தலா 1.5 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தத் துணிகர கொள்ளை பரபரப்பு ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆனங்கூர் பகுதியில் ரயில் மெதுவாக சென்றபோது தண்டவாளம் பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது. ஆனால் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காண முடியவில்லை.

இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:- 'ஈரோட்டிற்கு அடுத்தடுத்து வந்த ரயில்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆனங்கூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பெற்று ஆராய்ந்து வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவருக்கு வந்து சென்ற செல்போன் அழைப்புகளையும் பட்டியலிட்டு விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வோம்.

இது போன்ற சம்பவத்தைத் தடுக்கவும் மர்ம நபர்களைப் பிடிக்கவும் ஈரோடு வழியே வந்து செல்லும் ரயில்களில் இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்' இவ்வாறு அவர்கள் கூறினர்.