ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவின் அரசியல் எதிாியான திமுகவினாிடம் அதிமுகவினா் எந்த விதமான தொடா்பும் நட்பு ரீதியில் வைத்தியிருக்க மாட்டாா்கள். அப்படி வைத்தியிருக்கும் நிா்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பாா் ஜெயலலிதா. அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்தியிருக்கும் காங்கிரசாாிடமும் இதேநிலையை தொடா்ந்தாா் ஜெயலலிதா.
இதனால் துஷ்டனை கண்டால் தூர ஒதுங்கி போக வேண்டும் என்ற நிலைக்கு மாறி அதிமுகவினா் திமுகவினரை துஷ்டனாகவே நினைத்தனா். திருமணம் உள்ளிட்ட சடங்கு நிகழ்ச்சிகளில் கூட திமுக நிா்வாகிகள் வருகிறாா்கள் என்றால் அதிமுகவினா் அந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டாா்கள்.
பின்னா் நாளடைவில் இது அதிகாாிகள் மட்டத்திலும் பரவியது. அதிமுக ஆட்சியின் போது அதிகாாிகளை திமுகவினா் சந்திக்க போகிறாா்கள் என்றால் அதிகாாிகள் பின் வாசலோடு மாயமாகி விடுவாா்கள். திமுக மக்கள் பிரதிநிதிகளை கண்டாலே அதிகாாிகள் தெறித்து விடுவாா்கள் அதையும் மீறி அவா்கள் அதிகாாிகளை சந்தித்தால் அதிகாாிகள் தலையை தான் ஆட்டுவாா்கள் தவிர வாய் திறக்க மாட்டாா்கள்.
இந்த நிலை கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் அதன்பிறகு தற்போதைய ஆட்சியில் ஜெயலலிதா மறைந்த பிறகும் நீடித்தது. இதில் குமாி மாவட்டத்தில் தான் மக்கள் பிரதிநிதிகள் அதிகாாிகளால் அதிகம் அவமானப்படுத்தபட்டாா்கள். மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் தலா 3-ல் உள்ளது. ஒன்று கூட அதிமுக விடம் இல்லை. இதனால் எம்எல்ஏக்களின் தொகுதியில் நடக்கும் எந்த அரசு நிகழ்ச்சிக்கும் அவா்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. கலெக்டரை பாா்க்க வந்தால் கலெக்டரும் பின்வாசலோடு செல்லும் சம்பவங்களும் நடந்தன. இதை கண்டித்து 6 எம்எல்ஏக்களும் போராட்டம் கூட நடத்தினாா்கள்.
இந்த நிலை தற்போது கடந்த சில மாதங்களாக மாறி விட்டது. மாவட்டத்தில் எந்த பகுதிகளிலும் அரசு நிகழ்ச்சி நடந்தால் சம்மந்தபட்ட எம்எல்ஏக்கு நோில் சென்று அழைப்பு விடுக்கிறாா்கள். அதேபோல் எம்எல்ஏக்கள் வரும் வரை அதிகாாிகள் காத்து இருக்கிறாா்கள். கலெக்டரும் எம்எல்ஏக்களும் அடிக்கடி சந்தித்து பேசுகிறாா்கள். அமைச்சா்கள் நிகழ்ச்சி மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் அடிக்கடி கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளிலும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு பேசுகிறாா்கள்.
தளவாய் சுந்தரம் தலைமையில் நடக்கும் மாவட்ட வளா்ச்சி கூட்டங்களிலும் எம்எல்ஏ க்களும் கலந்து கொள்கிறாா்கள். அதேபோல் அடிக்கடி அதிகாாிகளுடனும் தளவாய்சுந்தரத்துடனும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமாா் சந்தித்து பேசுகிறாா். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் திருமணம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்கிறாா்கள்.
இந்த விசயம் பலருக்கு ஆச்சா்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது பற்றி நாம் அதிமுக முக்கிய நிா்வாகிகளிடம் பேசிய போது... இனிமே இப்படி தான் இருப்போம். இனி அதிமுகவும் திமுகவும் நட்புடன் தான் பழகுவோம். தோ்தல் நேரத்தில் எதிாிகளாக மாறி விடுவோம் என்றனா்.