திருவாரூர் வந்திருந்த சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார், அதில்
"தமிழகத்தல் மணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசின் முடிவின்படி தமிழக அரசு அறிவித்திருப்பது தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்தசெயல் வன்மையாக கண்டிக்கதக்கது. அரசு பள்ளிகளை மூடுவதை விட்டு விட்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
.
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ள 18 பக்கம் அறிக்கையில் கார்பரேட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை திரும் பெறாவிட்டால் வங்கிகள் மட்டுமின்றி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும், வாரக் கடன் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் ரூ 4 லட்சம் கோடி வாரக் கடனை தள்ளுபடி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக தொழில், விவசாயம், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் வரலாறு காணத விலை உயர்வால் நாட்டின் பொருளாதார நிலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாருர், நாகை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 80% நேரடி நெல் விதைப்பில் முளைத்த சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். போர்கால அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ரெய்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஊழல் செய்த அமைச்சர்கள் மற்றும் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்றார் ராமகிருஷ்ணன்.