பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும், அதற்கான தேர்தல் வியூகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மேல் முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிட மாட்டோம் என முதல்வர் கூறி உள்ளார். எனவே ஸ்டெர்லைட் ஆலை என்பது இனிமேல் தூத்துக்குடியில் திறப்பதற்கு சாத்தியம் இல்லை என நம்பிக்கை தெரிவித்தார்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வரன்முறை வைத்து, இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் முறைகேடு செய்ய முடியாது, எனக் கூறிய அவர், முறைகேடு என்பது பொய்யானது என தெரிவித்தார். அரசின் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் , அதில் முறைகேடுனு என்று சின்ன செய்தி வந்தாலும் மீடியாக்கள் அதை பெரிது படுத்துவதாக கூறிய அவர், அரசின நல்ல திட்டங்களின் சிறப்புகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்க எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
கஜா புயல் நிவாரணம் கிடைக்க வில்லை என பேட்டி கொடுக்கும் மக்கள் அதிமுக கட்சிக்கு எதிரானவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். புயல் பாதித்த பகுதிகளில் 95 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதா கூறிய அவர், ஒரு சில கிராமத்தில் வேண்டுமானால் சில காரணத்தால் மின் இணைப்பு வழங்காமல் இருக்கும் என தெரிவித்தார்.
மின் வாரிய ஊழியர்கள் உயிரை பனையம் வைத்து மின் இணைப்பு வழங்கி உள்ளனர் என்றும் அவர்களை பராட்டா மன இல்லாவிட்டாலும் குறை கூற வேண்டாம் என தெரிவித்தார்.
அதிமுக உணர்வுள்ளவர்கள் எல்லோரும் அதிமுக விட்டு சென்றலாம் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் எனக் கூறிய அவர், டிடிவி தினகரனுடன் சென்றவர்கள் எல்லாரும் நொந்து போய் இருக்கின்றனர். எல்லாரும் அதிமுகவிற்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அமமுகவில் இருப்பவர்கள் தவறான முடிவு எடுத்து விட்டோம் என வருந்துவதாகவும் கூறினார்.
கீழ் மட்ட நிர்வாகிகள் அதிமுக வந்துகொண்டு இருக்கின்றனர் எனக் கூறிய அவர், அதிமுகவில் இணைய டிடிவி தினகரனுடன் இருப்பவர்களிடம் எந்த பேச்சும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். செந்தில் பாலாஜிடன் அதிமுகவினர் யாரும் செல்லவில்லை எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
7 பேர் விடுதலையில் தமிழக அரசு சுணக்கமாக செயல்படவில்லை எனவும் கவர்னர் கையில் தான் முடிவு இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், 7 பேர் விடுதலையில் முதல்வர் அழுத்தம் கொடுத்து வருகிறார் உரிய பதில் விரைவில் கிடைக்கும் என தெரிவித்தார். மூன்று பேர் ,7 பேர் என்ற பாகுபாடு அதிமுக அரசிற்கு கிடையாது, அப்பாவி மக்கள் விடுதலைக்கு அதிமுக போராடி வருகிறது என கூறிய அவர், சில பிரச்சனைகளை வைத்துக்கொண்டு, சிலர் சதுரங்க விளையாட்டு அரசியல் நடப்பதால் 7 பேர் விடுதலையில் காலதாமத் ஏற்படுவதாகவும், விரைவில் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே , பயத்தின் காரணமாக திமுக கூட்டணி அமைத்து வருவதாகவும், அதிமுகவிற்கு எந்த பயமும் இல்லை எனவே தேர்தல் அறிவித்தவுடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதற்கான வியூகம் வகுத்து வருவதாகவும், வெற்றி கூட்டணி அதிமுக கூட்டணி தான் எனவும் தெரிவித்தார்.