நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நடைபெற இருக்கும் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு முறை தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டுள்ளார். இரண்டாவது கடிதத்தில் பல்வேறு அறிவுரைகளையும் தொண்டர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
மாநாட்டிற்கு வருவோருக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை முறையாக நிர்வாகிகள் செய்து கொடுக்க வேண்டும் என விஜய், மாநாட்டு பொறுப்பாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். இதன் காரணமாக மாநாடு நடைபெறும் இடத்திலேயே தற்காலிக அலுவலகம் அமைத்து நிர்வாகிகள் நேரடியாகப் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்சியின் தலைவரான விஜய் சிசிடிவி காட்சி மற்றும் காணொளி காட்சி வாயிலாக தொடர்ந்து மாநாட்டுப் பணிகளை கண்காணித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநாட்டுப் பணிகளை கண்காணிக்கும் விஜய் அவ்வப்போது சில அறிவுறுத்தல்களையும் கொடுப்பதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு வருவோருக்கு பாதுகாப்பான ஏற்பாடுகள் குடிநீர் வசதி, கழிவறை வசதி, கார் பார்க்கிங் உள்ளிட்டவைகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் நடிகர் விஜய் மாநாட்டு பணிகளை நேரில் விஜய் பார்வையிட இருப்பதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் விஜய் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.