Skip to main content

பாலியல் புகாரால் ஆத்திரமான 3 ஆவது கணவர்... காவல் நிலையம் முன்பே படுகொலை செய்யப்பட்ட மனைவி!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

thenkasi

 

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் சமீபம் உள்ள நாட்டார்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன். இவருடைய மனைவி சித்ரா. அங்குள்ள ரயில்வே கேட் பக்கம் பழக்கடை நடத்தி வருபவர். சித்ரா ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். சிறிது காலம், முதல் கணவரோடு வாழ்ந்தவர் அவரைப் பிரிந்தார். அடுத்து அருப்புக்கோட்டை பக்கம் திருச்சுழியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரோடு திருமணமாகி அங்கு வாழ்ந்தவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே வியாபாரம் நிமித்தமாக திருச்சுழி வந்த நாட்டார்பட்டி முருகனுடன் தொடர்பு ஏற்பட்ட தகராறில் 2 -ஆவது கணவரைப் பிரிந்த சித்ரா மகளுடன் நாட்டார்பட்டி திரும்பியவர், பின் 3 -ஆவதாக முருகனைத் திருமணம் செய்தவர், 9 வருடம் அவருடன் வாழ்ந்தார்.

இந்நிலையில் 3 -ஆவது கணவர் முருகன் சித்ராவின் மகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தால் அதிர்ச்சியானவர் அவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்திருக்கிறார். இது தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலைத்தில் சித்ரா புகார் கொடுத்தால், அதனை இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ விசாரித்தார். அதேசமயம் ஸ்டேஷனுக்கு முருகனும் வந்திருக்கிறார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு 4.30 மணிக்கு வெளியே வந்த போது பாலியல் புகாரால் ஆத்திரமான முருகன், சித்ரவுடன் காவல் நிலையம் முன்பே வாக்குவாதம் செய்திருக்கிறார்.

 

அதில் ஆத்திரமானவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் தலை, கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தியவர் கத்தியை உருவாமலே தப்பியிருக்கிறார். காவல் நிலையம் எதிரே போக்குவரத்துள்ள சாலையில் குத்திய கத்தி உருவ முடியாமல் ரத்த வெள்ளத்தில் கதறியபடி உயிருக்குப் போராடிய சித்ராவை டி.எஸ்.பி பொன்னிவளவன் மற்றும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துமனைக்கு அனுப்பப்பட்ட சித்ரா, வழியில் ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார்.

 

incident in thenksasi... police investigation


இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய முருகனைத் தேடி வருகின்றனர். விசாரணைக்காக முருகன் காவல் நிலையம் வந்த போதே ஆயுதத்தை மறைத்து வைத்தபடி வந்துள்ளார். கொடும் பாலியல் குற்றச் சாட்டை விசாரிக்கும் போலீசார் அவனிடம் கவனமாகச் செயல்பட்டிருந்தால் இந்தக் கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறனர் சமூக நல ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்