Published on 19/07/2020 | Edited on 20/07/2020

கடலூர் பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் நீரில் தவறி விழுந்து சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல் சூளையில் மண்ணுக்காக வெட்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து மூழ்கி சிறுவன் ஆதித்யா, சிறுமி பாரதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.