Skip to main content

ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகளுக்கு அனுமதி? - மதுரையில் சர்ச்சை போஸ்டர்கள்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

Hybrid cows allowed ..? Controversial posters all over Madurai ..!

 

ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகள், எருமை மாடுகள் பங்கேற்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியருக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய வகையிலான போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. 


‘தமிழ்நாடு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளையும், எருமை மாடுகளையும் போட்டியில் அவிழ்க்க அனுமதி வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி’ எனும் வாசகத்துடன் எருமை மாடுகள் புகைப்படத்தை அச்சிட்டு சர்ச்சைக்குரிய வகையிலான போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. 


மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நேற்று, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஜல்லிக்கட்டு கமிட்டியினர், மாடு வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் சார்பில் கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதி அளிக்கக்கூடாது எனக் கோரிக்கைவைத்த நிலையில், எந்த மாடாக இருந்தாலும் அவிழ்க்கலாம் என ஆட்சியர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதனைக் கண்டிக்கும் வகையில் நூதன முறையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் கீழ்ப் பகுதியில் ‘மதுரை ஆண்டவா ராஜ்’ என்பவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்