Skip to main content

மனைவி எடுத்த விபரீத முடிவு; துக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கணவர்!

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

 

Husband lost their life in grief over wife lost

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தழுதாழை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப். இவருக்கும் விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவ்யா(19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திவ்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதன் காரணமாக திவ்யா தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்(13.5.2025) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனைவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து மனமுடைந்த பிரதாப் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதாப்பை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரை மாய்ந்துகொண்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்