Star status for Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை (3.5) நட்சத்திர மதிப்பீட்டை, 70.81மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

Advertisment

இது முந்தைய ஆண்டு பெற்ற (0.5) நட்சத்திர மதிப்பீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகம் இந்த மதிப்பெண்ணை எட்டுவது இதுவே முதல்முறை. இதன்படி தமிழ்நாட்டின் 2வது அதிக புதுமை கண்டுபிடிப்பு செயல்திறன் மிக்க அரசு பல்கலைக்கழகமாக மாறி உள்ளது.

Advertisment

கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் ஐஐசி அமைப்பு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.இந்த முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இது அமைந்துள்ளது.ஆராய்ச்சி அறிஞர்கள் மாணவர்களிடையே புதுமையான ஆராய்ச்சி சிந்தனை, தொழில் முனைவு, திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்டஐஐசியின் செயல்பாடுகள் அதிகரித்தன.

மேலும் சிதம்பரம் பகுதியில் பள்ளிகளின் அடல் ஆய்வகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சியானது தமிழகம் முழுவதும் புதிய முயற்சி, தொழில் முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.சாதனை படைத்த ஐஐசி குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisment