திருச்சி அரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகன் பிரபு (வயது 27). காமராஜர் பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாமினி என்பவரோடு திருமணம் நடந்து 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தாமினி கணவரை பிரிந்து குழந்தையுடன் தாய் வீடு சென்று விட்டார்.
இந்த நிலையில் வீட்டில் கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரபு தூக்கு மாட்டி தற்கொலை முயன்றுள்ளார். அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து அரியமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரபு தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற அறையில் அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதில் அவர் மனைவி மற்றும் குடும்பத்தார் குறித்து பல்வேறு விஷங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் குறிப்பாக திருமணம் ஆன சில நாட்களில் இருந்து பெண் வீட்டார் தரப்பில் இருந்து என் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. என் மனைவி தாமினி என்னுடன் எளிமையான வாழ்க்கை வாழ விரும்பவில்லை. இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, என் குடும்பத்தாரும் நிம்மதி இழந்து விட்டனர்.
குழந்தை பிறந்த 10 நாளில் இருந்து என் மனைவி என்னிடம் இருந்து பிரிந்து விட்டார். என் குழந்தையை பார்க்க சென்றால் காட்ட மறுக்கின்றனர். என் மனைவியின் அத்தை சந்திரா என்னிடம் நாங்கள் 10 பேரும் அரசு வேலையில் இருப்பவர்கள் நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிரட்டினார். கடந்த 20ம் தேதி சமாதானம் பேசி இருவரையும் வாழ வைக்கிறோம் என்று கூறினார்கள்.
அடுத்த நாளே மதியம் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த டூவிலர், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு என் குடும்பத்தை அழித்து விடுவதாக மிரட்டினர். என் குடும்பத்தை காப்பற்ற வேறு வழியில்லாத காரணத்தால் நான் வீரமரணம் அடைகிறேன். நான் கோழை அல்ல.
என் குட்டி பையா, அழகே, அன்பே, மகனே, சித்தப்பா, அவ்வா, தாத்தா இருக்காங்க, கவலைப்படாதே! நம்ம குடும்பத்தை காப்பத்த வேற வழி தெரியலடா, டேய் சந்துரு நீயும், உன் பொண்டாட்டியும் தான் அப்பா, அம்மான்னு, சொல்லி வளடா, அவனுக்கு ஏக்கம் வராத அளவுக்கு வளடா, நல்லபடியா பாதுக்கோ, புள்ளைய நேர்மையா வளடா, என் உயிர் நண்பர்களும் என்னை மன்னிச்சிடுங்க, தம்பி சந்துரு சட்டம் தன் கடமையை செய்யும், நம்ப குடும்பத்துக்கு துணையா இருடா !
அப்பாவி ஆண்களுக்கு எதிராக பெண் வன்கொடுமை சட்டத்துக்கு எதிராக இது சமர்ப்பணம். இதுவே சரித்திரம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அரிமங்கலம் போலிசார் தாமினி, தாமினி தந்தை கருணாநிதி, சந்திரா, அமுதா, உதயகுமார், தனலெட்சுமி, ஜோதீஸ்வரன், ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.