Skip to main content

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்! (படங்கள்)

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணி தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் 1983ஆம் ஆண்டு ஹிந்து மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், வேறுபாடுகள் இல்லாமல் இணைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னையில் விநாயகர் சிலை வைப்பது திருவல்லிகேணியில் துவங்கப்பட்டது.

 

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ஒன்னேகால் லட்சம் இடங்களில் வைப்பதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் ஐந்து லட்சம் வீடுகளில் வைத்தார்கள். இந்த ஆண்டு பத்து லட்சம் வீடுகளில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் கரோனா என்கிற காரணத்தைக் கூறி விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கிறோம் என்று கூறுகிறார்கள். கடந்த ஆண்டு கரோனா தீவிரம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்துள்ளனர். அதேபோல் டாஸ்மாக் பிரமாதமாக நடந்துகொண்டிருக்கிறது. கேளிக்கை கிளப்கள், பஸ் பயணங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் நடந்துகொண்டிருக்கிறது.

 

சட்டசபையும் தினசரி நடந்துகொண்டிருக்கிறது ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவை மட்டும் தடை செய்றாங்க. அதேபோல், பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் கோவில்களை மட்டும் இடித்துக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. அதனால் மறு அறிக்கைவிட்டு, சில கட்டுப்பாடுகளை ஹிந்து முன்னணி ஏற்றுக்கொள்கிறது, அதோடு அனுமதி வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கின்றோம். இந்த உண்ணாவிரத வெற்றியடையும். அதேபோல் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்