Skip to main content

'9 மாவட்டங்களில் கனமழை'-வெளியான அலர்ட்

Published on 18/01/2025 | Edited on 18/01/2025
 'Heavy rain in 9 districts'-alert issued

தமிழகத்தில் காவிரி படுகை உட்பட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இன்று (18/01/2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை 19/01/2025 குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20, 21 ஆம் தேதி வரை வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்