நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதற்கான தேதிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு மக்கள் தயாராகும் வகையில் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை அறிய இணையதள முகவரியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையத்தள முகவரிhttps://eci.gov.in/ தமிழக தேர்தல் ஆணைய இணையதள முகவரி : http://www.elections.tn.gov.in/voterservices.aspx. என்ற இரு இணைய தள முகவரியில் எதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது பெயர் , தந்தை பெயர் ,சட்டமன்ற தொகுதி பெயர் ,மாவட்டம், மாநிலம் குறிப்பிட்டால் பெயர் பட்டியல் இந்த இணையதளத்தில் மூலம் காணலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை அறியலாம்.
தங்கள் பெயரை பதிவு செய்யாத இளைஞர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கென "ஹெல்ப் லைன்" சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமும் வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் புதிய வாக்காளராக பதிவு செய்வது எப்படி ? குறித்த விபரத்தை வாக்காளர்கள் அறியலாம். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான " மொபைல் செயலியை" அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் பெயர் "Voter Helpline" என கூகுள் பிளே ஸ்டோரில் டைப் செய்து டவுன்லோடு செய்ய வேண்டும். இல்லையென்றால கட்டணமில்லா தொலைப்பேசி சேவையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான கட்டணமில்லா தொலைப்பேசி எண் : 1950. இதன் மூலம் அனைவரும் வாக்களிப்போம். ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்.