தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தோ்வு நேற்றுடன் முடிவடைந்தது. தமிழக பள்ளி கல்வி பாடதிட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பருவத்தோ்வுகளும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தோ்வு முறைகள் அமலில் உள்ளன. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான அரையாண்டு தோ்வு மற்றும் இரண்டாம் பருவத்தோ்வு கடந்த டிசம்பா் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக ஒரே மாதிரியான வினாத்தாள்கள் பின்பற்றப்பட்டது.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தோ்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடா்ந்து பள்ளிகளுக்கு இன்று முதல் தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடப்டுகிறது. இதற்கு வசதியான இந்த விடுமுறை அமைந்ததால் மாணவா்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனா். மேலும் இந்த விடுமுறை நாட்களில் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு மருத்துவகல்லூரி படிப்பிற்கான நீட் தோ்வுக்கான பயிற்சிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.