ஜி.எஸ்.டி.யில் இன்புட் கிரெடிட் என்ற சலுகையை பெறுவதற்காக ஒரு பெண் போலி ரசிதுகளை காட்டி 43 கோடி மோசடி செய்ய முயற்சித்துள்ளார். இது ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகளுக்கு தெரியவரவே அவரை கைதுசெய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஐ.டி. நிறுவன பெண் அதிகாரி பூனம் சர்மா. இவர் நாதேஷ் ட்ரேட் இம்பெக்ஸ், அன்மோல் ஃபெர்ரோ இம்பெக்ஸ், விவான் ட்ரேட் இம்பேக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் இயக்குனராகவும் உள்ளார். ஜி.எஸ்.டி.யில் இன்புட் க்ரெடிட் என்ற சலுகையை பெற பல நிறுவனங்களுக்கு பொருட்களை விற்றதாக போலி ரசீதுகளை தயாரித்து கொடுத்துள்ளார்.
மேலும் இதற்காக அவர் ரூ. 43 கோடி சலுகை பெறவும் முயற்சித்துள்ளார். இவர்தான் அதற்குண்டான கமிஷனை பெறுகிறார். என்பதை அறிந்துகொண்ட ஜி.எஸ்.டி. இயக்குனரக அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விசாரித்ததில் தான் எவ்வாறு அட்னஹ் மோசடியில் ஈடுபட்டேன் என்பதையும் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஜி.எஸ்.டி. இயக்குனரக அதிகாரி, சென்னையில் மட்டும் இது 3வது முறையாக நடந்துள்ளது. தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.