
திமுக தலைவர் கலைஞரின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதன்படி, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி கழக உறுப்பினர் எம்.கே. மோகன் முன்னின்று நடத்தும் . “JOB FOR ALL” எனும் “மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்” நாளை (6.5.2018 - ஞாயிற்றுக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை சென்னை ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் TATA, DELL, JIO, HCL, TVS, DSC HUNDAI, ASHOK LEYALND, RENAULT, KVB, APPOLLO HOSPITALS போன்ற 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அனைத்து பட்ட படிப்புகளும் படித்த இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
இதில் பங்கேற்க எந்த வித கட்டணமும் இல்லை, அனுமதி இலவசம். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெறும், இந்த “மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாமில்” படித்த இளைஞர்கள், பெண்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெற வேண்டுமாய் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.