Skip to main content

இரண்டரை வயது குழந்தைக்கும் டிக்கெட் கொடு! இல்லை எனில் மெமோ...

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே மலைக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மாநகரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணிமனை முன்பு திடீரென டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்களை இயக்க மறுத்து கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உறையூர் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளும் விரைந்தனர்.

 

bus

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தோம் அப்போது அவர்கள், மலைக்கோட்டை டிப்போவில் நடத்துனர் முருகானந்தம் இவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை வரை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லணை நோக்கி பஸ் சென்றுகொண்டுடிருக்கும் போது பனையபுரம் அருகே ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமசந்திரன் பயணிகளிடம் சோதனை செய்தார். அப்போது ஒரு இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்தது. ஆனால் பரிசோதகர் குழந்தைக்கு எப்படியும் 4 வயது இருக்கும் நீ ஏன் டிக்கெட் கொடுக்கவில்லை என்று நடத்துனர் முருகானந்தத்திற்கு மெமோ கொடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த முருகானந்தம் இரண்டரை வயது குழந்தைக்கு டிக்கெட் போட சொல்லி கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் டிக்கெட் போடாத எனக்கு மெமோ கொடுத்தும் அசிங்கமாக திட்டுவது சரியா என்று கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இதன் பிறகுதான் அனைவரும் முடிவு செய்துதான் இந்த போராட்டம் என்றார்கள். திருச்சி மாநகரில் டிக்கெட் பரிசோதகர் ராமசந்திரன் பல இடங்களில் சோதனையின்போது கண்டெக்டர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். மேலும் பயணிகளை மிரட்டி அபராதம் வசூல் செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பஸ்களை இயக்குவோம் என்றனர்.
 

மேலும் அங்கு வந்த போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். அரசு பஸ் டிரைவர் - கண்டெக்டர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்பினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்