Skip to main content

மின் கம்பி அறுந்துவிழுந்து அறுவடைக்கு தயாரான விளைச்சல் சாம்பல் ஆன பரிதாபம்!

Published on 25/01/2018 | Edited on 26/01/2018

மின் கம்பி அறுந்துவிழுந்து அறுவடைக்கு தயாரான 
விளைச்சல் சாம்பல் ஆன பரிதாபம்!

அறுவடைக்கு தயாராக இருந்து நெல் வயலில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து 2 ஏக்கர் அளவிற்கு மேல் எரிந்து சாம்பளாகியது. தீயனைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் 500 க்கும் அதிகமான விளைச்சல் காப்பாற்றப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வீரன்வயல் கிராமத்திற்கு ஆலங்காட்டில் இருந்து விளைநிலங்களில் கம்பம் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த மின்கம்பிகள் பழுதாகி அடிக்கடி அறுந்துவிழுந்திருக்கிறது, இது குறித்து பல முறை மின்சாரத்துறையில் புகார் கூறியும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த தனமணி என்கிற விவசாயி நிலத்தில் அறுந்துவிழுந்து, அதை பார்த்து பதறிடடித்து அந்த கிராமத்து மக்கள் தண்ணீர் கொண்டு முடிந்தவரை போராடி அனைத்தும் முடியவில்லை, இறுதியாக முத்துப்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து விரைந்து வந்தனர் தீயணைப்பு துறையினர். ஆனால் வடகாடு கிராமத்தில் உள்ள குருகலான வழியில் தீயணைப்பு வாகனம் போகமுடியாத நிலையானது,  சற்றும் யோசிக்காமல், நேரத்தை வீணடிக்காமல் தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியோடு காலால்மிதித்தும், குடம் பாத்திரங்கள் மூலமும் தண்ணீர் கொண்டு அணைத்தனர். இருந்தும் இரண்டு ஏக்கர் அளவிற்கு எரிந்து சாம்பலாகியது. அக்கம் பக்கமுள்ள 500 க்கும் அதிகமான நெல்வயல்களை காப்பாற்றினர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி தனமணி கூறுகையில், ‘’ பவரான கம்பி நடுவயக்காட்டிலேயே போகுதுங்க, ஆனாலும் எந்தவித பாதுகாப்பும் கிடையாது, பல இடங்களில் டேமேஜாகி இருக்கு. கடந்த ஆண்டு ஒரு முறை இது போல அறுந்துவிழுந்துச்சி, விவசாயிகளை திரட்டிட்டு போயி முறையிட்டோம்,  சரி செய்கிறோம்னாங்க, ஆனால் அறுந்த இடத்த கட்டிட்டு போயிட்டாங்க, இப்ப அறுந்து போச்சி, கடண வாங்கி, தண்ணீர் இல்லம, படாத பாடு பட்டு விளைய வச்சோம் வீட்டுக்கு வரவேண்டிய நிலமையில இப்படி ஆகிடுச்சி, ஒரு படி நெல்லுக்கூட வீட்டுக்கு கொண்டுவரமுடியல, இதுவே உழவு நேரத்திலோ, அறுவடை நேரத்திலோ நிகழ்ந்திருந்தா எத்தன உயிர் போகுமோ, அரசின் அலட்சியம் தாங்க இதுக்கு காரனம். ‘’ என்று வேதனையோடு கூறினார்.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்