Skip to main content

திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கரோனா தொற்று!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
ரப

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

 

தமிழகத்தை பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவனுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இவரையும் சேர்த்து 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்