Skip to main content

ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைப்பதா? தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
 Frontline denunciation of  Extermination of untouchability!



திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ளது அரியாகுஞ்சூர் ஊராட்சி. பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அரியாகுஞ்சூர் ஊராட்சித் தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் பஞ்சாத்து ராஜ் சட்டப்படி இட ஒதுக்கீட்டுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் தேர்வு செய்யப்படுகிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் மீது மிக கொடூரமான தீண்டாமை கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன.

ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறவர்கள் திருவிழாவிற்கு தப்படிக்க வேண்டும், ஊர் வேலை செய்ய வேண்டும், தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது, தேசியக் கொடி ஏற்றக்கூடாது, கிராமசபை கூட்டத்தில் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, பெயர் பலகைகளில் தலைவர் பெயரை  சிறியதாகவும் துணைத் தலைவர் பெயரை பெரியதாகவும் எழுதி வைப்பது, நிர்வாகத்தில் ஒரு துளிகூட பங்குதர மறுப்பது என்பதாக தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

 

 


இக்கொடுமைகளின் உச்சகட்டமாகவே ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைத்து வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமை எங்குமே நிகழ்த்தப்பட்டிருக்காது. இக்கொடுமை தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடுமை நடந்த கிராமத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். அரியாகுஞ்சூர் ஊராட்சி நிர்வாகத்தை சட்டப்படி ஜனநாயகப்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள்” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai says People of North India have also realized it

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரின் போது பா.ஜ.கவும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியும் 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றினாரே?

“அவருக்கு எதிர்க்கட்சி மாடம் கிடைக்கிறதா என்று பார்க்க சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்த ஊழல்களை பற்றியெல்லாம் தென்னிந்திய மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். வட இந்திய மக்கள் கொஞ்சம் தெரியாமல் இருந்தார்கள். இப்பொழுது, வட இந்திய மக்களும் அதை உணர ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், தங்களுடைய தொகுதி குறித்த கோரிக்கைகள் எதையுமே அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. மற்ற எம்.பிக்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்காத இந்தச் செவிட்டு அரசு, மோடி பேசுவது மட்டும் நாங்கள் கேட்டுக் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்”.

தென்னிந்தியாவில் பா.ஜ.க வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்திற்கு வரும்போது வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

“நோட்டா கூட போட்டி போட முடியாத சூழல்தான் கடந்த தேர்தலில் நடந்தது. இப்பொழுது நோட்டா அளவுக்கு வரலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அதைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடிய பாஜக வேட்பாளர் கூட இந்த ஊரைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். இங்கே பா.ஜ.க வலுவாக இருக்கிறது என்றால் இங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. சென்னையிலிருந்து வேட்பாளரை கூட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

திருவண்ணாமலையில் ஏசி தரத்துடன் இருக்கின்ற பொது நூலகத்தைப் போல இளைஞர்களுக்கு வேறு என்ன ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

“நூலகங்களை விரிவுபடுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அந்த நூலகத்தில் மக்கள் பயன் பெறுகின்ற, மாணவர்கள் பயன்பெறுகின்ற புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.  அது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்தத் திட்டம் தொடரும்”.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் அமைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த மாதிரி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறீர்களா?

“நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 507 கேள்விகளில் ஒன்றிய அரசின் கீழ் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அந்தத் துறைகள் அடிப்படையில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  மாநில அரசு திட்டத்தின் மூலமாக, இந்தத் திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்”.

அண்ணாமலையார் கோவிலை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களே?

“திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை கோவிலுக்கு சிமெண்ட் சாலைகளை அமைச்சர் போட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தத் திருவண்ணாமலையை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். மொத்தமாக் திருவண்ணாமலை நகருக்கு அடிப்படை வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், கார்த்திகை தீப நாளில் 45 லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் அளவிற்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பாக அந்தந்த நிதிகளை பயன்படுத்தி என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்”.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியும் இதுவரைக்கும் விவசாயி குறித்துப் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

“விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி, நமது முதலமைச்சர்தான் தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே விவசாயிகள் கடனை முதன் முறையாக தள்ளுபடி செய்தது டாக்டர் கலைஞர்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். அவர் வழியில் நமது முதலமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த இரண்டரை வருஷத்தில் 2 லட்சம் மின்சாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, தேர்தல் அறிக்கையில் விவசாய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதைவிட விவசாயிகளைப் பற்றி யார் அதிகமாக பேசுவது?. மோடி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? விவசாய கடன் தள்ளுபடி பற்றி மோடியும், எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்காகவே தனிப்பட்ட தனி பட்ஜெட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.