பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் 108 வைணவ தலங்களில் முதன்மை தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள், திருக்கோவில் திருப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றது. தமிழக அரசு யானைக்கு மேலும் ஒரு பாகனை நியமித்து உத்தரவிட்டதில் யானைப் பாகன் ஸ்ரீதர் விலகினார் பின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது அதில் யானைப்பாகன் ஸ்ரீதரை பணி நியமனம் செய்ய கூறப்பட்டு உள்ளது.
ஆண்டாள் யானையானது திருச்சியைச் சேர்ந்த பக்தர் அண்ணாமலை என்பவரால் 16-10-86 அன்று கோவையிலிருந்து 8 வயது குட்டியாக வாங்கிவந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக தரப்பட்டது. ஆண்டாள் ஸ்ரீரங்கம் வந்ததிலிருந்து கோவில் யானை பாகனாக இருந்து ஸ்ரீதர் பராமரித்து வந்தார்
ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருக்க வேண்டும் என்று இந்து அறநிலைத்துறை உத்தர விட்டது. அதனை தொடர்ந்து ராஜேஷ் என்பவரை உதவிப் பாகனாக நியமனம் செய்தனர்.
2 பாகன்களை நியமிப்பதால் யானை யாருடைய சொல்லைக் கேட்பது என்பதில் குழப்பம் ஏற்படும். அதனால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும் என்றனர். அதன்பின்னர் ஆண்டாளும் ஸ்ரீதரும் பிரிந்தார்கள். இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஆண்டாளை ஸ்ரீதர் 3-1-2013-க்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (9- 4-19) சந்திக்கிறார்.
எப்போதும் ஆண்டாள் யானையுடன் யானை பாகன் ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் வீதிகளில் வலம் வரும்போது பக்தர்களும் அந்த பகுதி மக்களும் பக்தி பரவசத்துடன் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்கள். சின்னத்திரையில் மிகப்பிரலமான சித்தி தொடரில் ஆரம்ப காட்சிகளில் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையுடன் ஸ்ரீரங்கம் வீதிகளில் நடந்து வருவதை சென்டிமென்ட் காட்சியாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தது குறிப்பிடதக்கது.