Skip to main content

பள்ளியை சூழ்ந்த வெள்ளம்! விழிபிதுங்கும் அதிகாரிகள்!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
skol


வயல்வெளியில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளியில் தண்ணீர் சூழ்ந்ததால் மாணவர்கள் செல்லமுடியாத சூழலுக்கு ஆளாகினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள கொள்ளிடக்கரையோர கிராமம் சித்தமல்லி, அங்குள்ள அக்ராகரத்தில் இயங்கிவந்த நடுநிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடத்தை 1 கோடியே 62 லட்சத்தில் ஒரு விளைநிலத்தில் கட்டி கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
 

skol


கொள்ளிடத்தில் இருந்து பிரியும் தெற்கு ராஜன் வாய்க்கால் தண்ணீரை சித்தமல்லி வாய்க்காலுக்கு திருப்பிவிட்டனர். அந்த வாய்க்கால பல ஆண்டுகளாக தூர்வாராமல் தூர்ந்து கிடந்தால் பள்ளி அருகே உடைப்பு ஏற்பட்டு பள்ளிக்கட்டிடத்தை சூழ்ந்து கடல்போல காட்சியளித்தது.

பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் முழங்கால் அளவு நனைந்துகொண்டே சென்றனர் தண்ணீர் வந்ததுக்கே இப்படி என்றால் வரும் காலத்தில் வரும் பெரும் மழையில் என்ன செய்யப்போகிறதோ என்கிற அச்சம் பொதுமக்களிடமும், பள்ளி மாணவ, மாணவிகளிடமும் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்குள்ள குளத்தை தூர்வாரி பள்ளியை சுற்றியும் நிறப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
 

skol


’’பள்ளிகளையும், கோயில்களையும் மேடான பகுதியில் கட்டினார்கள் நம் முன்னோர்கள், வெள்ளகாலங்களில் அது நிவாரன முகாமாக இருந்தது, ஆனால் ஆதயத்தை மட்டுமே குறிக்கோலாக கொண்ட இன்றைய அரசியல்வாதிகள் வயக்காட்டில் கட்டி முழ்கடிக்கின்றனர். கொள்ளிடக்கரையோரம் என்பதால் மழைகாலத்தில் அங்குள்ள மக்கள் எங்கு போவார்கள் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் சிந்தித்து தூர்வாரவேண்டும் என்கிறார் அங்குள்ள இளைஞர் வசந்த்.

சார்ந்த செய்திகள்