Published on 28/12/2024 | Edited on 28/12/2024
நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் மக்கள் பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.
முன்னதாக விஜயகாந்த் நினைவிடம் நோக்கி தேமுதிக கட்சி சார்பில் அமைதி பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அதற்கான அனுமதியை மறுத்து இருந்தது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதன் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இந்தநிலையில் நினைவு நாளை ஒட்டி மரியாதை செலுத்த அதிகாலை முதலில் மக்கள் குவிந்து வரும் நிலையில் கோயம்பேடு ஸ்தம்பித்துள்ளது.