மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவருக்குத் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 3 ஆண்டுகளாகக் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பிரியா, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனது குழந்தைகளை தன்னுடைய பெற்றோரின் பாராமரிப்பில் விட்டுள்ளார் பிரியா.
இந்த நிலையில் பிரியாவிற்கு இன்ஸ்டாகிரம் மூலம் நாமக்கல் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து வல்லரசுவை திருமணம் செய்துகொண்ட பிரியா கடந்த 6 மாத காலமாகச் சேலம் வாழப்பாடி அருகே உள்ள வீட்டில் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் பிரியாவிற்கும் - வல்லரசுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரியாவை வல்லரசு கொன்று எரித்துள்ளார். வல்லரசுவின் வீட்டின் அருகே முழுவதுமாக எரிந்த பெண்ணின் உடல் கிடப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கொலை செய்த வல்லரசு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இருவரும் காதலித்து செய்துகொண்டோம். 6 மாதமாக எந்த பிரச்சனையில் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த சில நாட்களாக பிரியாவின் நடவடிக்கை சரியில்லை. என்னுடைய பேச்சை அவர் கேட்கவே இல்லை. இதனால் பிரியா என்னை விட்டு சென்று விடுவார் என்று பயந்தேன் சம்பவத்தன்று பிரியாவிற்கு எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை அருவாளால் வெட்டி கொலை செய்து விட்டேன். பின்பு நண்பன் ஒருவரின் துணையுடன் பிரியாவின் உடலை எரித்துவிட்டேன் என போலீஸிடம் வல்லரசு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.