பெண் மருத்துவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக ஒருங்கிணைந்த வேலூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பொழுது குற்றவாளிகள் நான்கு பேரையும் காவல்துறையினர் அழைத்து வந்த பொழுது செய்தியாளர்கள் அவர்களை படம் பிடித்தனர். அப்பொழுது கைதி ஒருவர் திடீரென செய்தியாளர்களை தாக்கியது பரபரப்பு ஏற்படுத்தியது.
பாலியல் குற்றவாளி செய்தியாளர்களை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கைதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டுப் பாலியல் வழக்கில் நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.