புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, பாலக்குடி கிராமத்தில் மர்ம காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையிலிருந்து பாலக்குடிக்கு ஒரு விழாவுக்கு வந்த ராணிக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சலுக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை சென்ற சில நாளில் 28 ந் தேதி உயிரிழந்தார்.
இதுவரை என்ன காய்ச்சலால் ராணி உயிரிழந்தார், மக்கள் பாதிப்படைந்தது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆனால் வைரஸ் காய்ச்சல் என்ற பதில் மட்டுமே சொல்லப்படுகிறது.
ராணியின் இறப்பு அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ராணியின் உறவினர்கள் பலருக்கும் இந்த காய்ச்சல் பற்றிக் கொண்டுள்ளது.
மணமேல்குடி அரசு மருத்துவமனையிலும், பல ஊர்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலம் பலர் பல மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பிரபு துரைராசு கூறும்போது, சென்னையிலிருந்து ஊருக்கு வந்த ராணிக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு அவரை பார்த்துக் கொண்ட உறவினர்களுக்கும் பரவியுள்ளது. ராணி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இது என்ன வகையான காய்ச்சல் என்று இதுவரை சொல்ல மறுக்கிறார்கள். எங்கள் ஊரில் பரவும் இந்த மர்ம காய்ச்சலை தடுக்க தமிழக அரசு மருத்துவ குழுவை அனுப்பி ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
காய்ச்சல் பலி முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தொடங்குகிறது. சுகாதார துறை விரைந்து செயல்பட்டால் காய்ச்சல் இறப்புகளை தடுக்கலாம்.