Published on 08/02/2021 | Edited on 08/02/2021
![FARMERS LOANS CANCELLED TAMILNADU GOVERNMENT GAZETTE NOTIFICATION](http://image.nakkheeran.in/cdn/farfuture/jQXaU0uPo7gGzdmLcPL9qV_ldjQdUDfEdZvOStybyu4/1612800449/sites/default/files/inline-images/tn32.jpg)
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில், 'தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையைத் தொடர்ந்து, கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழை விரைவில் விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110- கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.