கடந்த 19.07.2019 அன்று காலை 7.35 மணியளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலவிளாங்குடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி பிள்ளையாருக்கு மிளகாய் வற்றலை படையலிட்டு மனு கொடுக்க அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் கிராம மக்களுடன் செல்லவிருந்த தகவலையறிந்த திருவையாறு டிஎஸ்பி பெரியண்ணா தலைமையில் தங்க சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் மாலையில் விடுவிப்பதாக கூறிவிட்டு திருச்சி மத்திய சிறைச்சாலை யில் 02.08.2019 வரை நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டார் அவர். இந்நிலையில் ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் இன்று 27.08.2019 சனிக்கிழமை மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருவையாறு காவல்நிலையத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தங்க சண்முகசுந்தரம் மாலை விடுவிக்கப்பட்டார்.