‘முன்னாள் தமிழக அமைச்சர் ஒருவர், அதுவும் இந்தியா முழுவதும் தெரிந்த முகம், எத்தனை காலத்துக்குத்தான் தலைமறைவாகவே இருக்கமுடியும்? உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கும் வரையிலும், காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, ஒளிந்துமறைந்து வாழ்ந்திட முடியுமா? காவல்துறையால் பிடிக்கவே முடியாத அரசியல்வாதியா அவர்?’
கே.டி.ராஜேந்திரபாலாஜி தேடுதல் வேட்டை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் பேசினார், அந்த போலீஸ் சோர்ஸ்.
அவர் கூறியதுபோல், தேடுதல் மற்றும் விசாரணை குறித்து நேற்று (30-ஆம் தேதி) இருந்த பரபரப்பு, இன்று (31-ஆம் தேதி) இல்லை. ‘நெருங்கிவிட்டோம்; பிடித்துவிட்டோம்; இன்றிரவு 8 மணிக்கு மேல் தகவல் வெளியிடுவோம்.’ என்று புதிர் போட்டது, அந்த காவல்துறை பட்ஷி.
ஒருவேளை ராஜேந்திரபாலாஜி பிடிபட்டிருந்தால், அதனைப் புத்தாண்டு கொண்டாட்ட அறிவிப்பாக வெளியிட நினைக்கிறதா, தமிழக அரசு? அல்லது, ஆங்கிலப் புத்தாண்டுக்குப் பிறகும் தேடுதல் வேட்டை தொடருமா?