தேனி பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார்.
பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் பிரிவு தலைவர் முக்கையா முன்னிலை வகித்தார். நகர செயலாளர் முரளி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாநில தேர்தல் பணிக்குழு செல்வேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன், மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் சந்திரன்(மதிமுக), வெஙக்டேசன்(சிபிஎம்), நாகரத்தினம்(விசிக கிழக்கு),சுருளி(விசிக மேற்கு), வல்லரசு(பார்வர்டு பிளாக்), அம்ஜத்(மனிதநேயமக்கள் கட்சி), பெத்தாட்சி(சிபிஐ), நூர்முகமது(முஸ்லீம் லீக்), தமிழன்பன்(ஆதிதமிழர் பேரவை), பால்பாண்டி(வாழ்வுரிமை), துரைராஜ்(எம்.ஜி.ஆர் கழகம்), ரகுநாகநாதன்(திக) உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பேசிய தேனி பாராளுமன்ற வேட்பாளர் ஈ.வி.கே .எஸ்.இளங்கோவனோ, ‘’நான் இங்கு தேனி பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகின்றேன். தேர்தல் முடியும்வரை மட்டும் இல்லை தேர்தல் முடிந்த பின்னரும் நான் இங்கு தான் இருப்பேன். உங்கள் குறைகளை தீர்ப்பதற்காக பாடுபடுவேன். அதிமுக கூட்டணி ஒரு சவ ஊர்வலம் செல்லும் கூட்டணியாக உள்ளது. அவர்கள் ஒரு பாடை கட்டியுள்ளனர். அந்த பாடையில் பாஜகவை பிணமாக வைத்துள்ளனர். அந்த பாடையை தூக்குவதற்கு ஒருபுறம் அதிமுகவும் , மற்றொரு புறம் ராமதாஸ் உள்ளார். பின்னால் ஒரு புறம் விஜயகாந்தும் மற்றொரு புறம் ஏ.சி.சண்முகமும் உள்ளனர். சங்கு ஊதுவதற்கு வாசன் மற்றும் மணியடிப்பதற்க ஏ.சி.சண்முகம் உள்ளனர். எனவே இவர்கள் பாடையை தூக்கி சென்று சுடுகாட்டிற்கு சென்று அங்கு பணமாகி பாஜகவை புதைத்து விட்டு அங்கேயே இவர்கள் அனைவரும் அடக்கம் ஆகும் கூட்டணி அஇஅதிமுக கூட்டணியாகும்.
நான் ஈரோட்டிலிருந்து சமுக புரட்சி வெடித்து வந்தவன். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன் இல்லை, பஞ்சம் பிழைக்க வந்து தேனி மாவட்டத்தையே விலைக்கு வாங்கி சுருட்டியவனும் இல்லை. சாதனைகளை சொல்லுங்கள், அரசியல் பேசுங்கள் ,பேசுவோம் அதை விடுத்து தனித்தன்மையை பேசாதீர்கள்.
பிஞ்சிலே பழுத்தவர்கள் எங்களோடு விளையாட வேண்டாம், உங்களுடைய குழந்தைகள் சுபிட்சமாக வாழ தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். இந்தியாவில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும், ஆகவே எதிரணிக்கு டெபாசிட் கூட வழங்க கூடாது. இது சாதாரண தேர்தல் கிடையாது, ரு100க்கும் 200க்கும் லட்சத்திற்கும் வாக்களிக்க வேண்டாம் முந்தானை முடிச்சில் களவாண்ட தொகையை உங்களுக்கு அளிக்கின்றார்கள்.
இளங்கோவன் ஒன்றும் தேனியில் பஞ்சாயத்து கட்டப்பஞ்சாயத்து பண்ணுபவன் அல்ல, கட்டப்பஞ்சாயத்து செய்து இன்னொருவருடைய பணத்தை பறிப்பவனும் அல்ல. எனவே இந்த தேர்தலில் எதிரணிக்கு மரண அடி கொடுங்கள்’’ என்று கூறினார்
.