Published on 24/10/2019 | Edited on 24/10/2019
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி உட்பட நாடு முழுவதும் 51 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதேபோல் சில மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கியது.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் வகையில் இந்திய தேர்தல்ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.